சிவகங்கை: ஜூன் :02
சிவகங்கை நகராட்சியில் வழக்கம்போல் நடைபெறும் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தின் நிறைவில் நகராட்சியின் சேர்மன் சி.எம். துரைஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் குறிப்பிட்டதாவது :
நகராட்சியின் துணைச் சேர்மன் கார்கண்ணன் வார்டில் ரூபாய் 1. 59 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் தொடங்கப்பட்டுள்ளது . ராஜாவின் 11- வது வார்டில் ரூ.70 – லட்சம் மதிப்பீட்டில் சாத்தப்ப ஊரணியை புனரமைத்து நடைபாதை அமைக்க வேலைகள் நடந்து வருகிறது .கோட்டைமூலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு , அதில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது .
நகராட்சியில் நூலகம் அமைத்து அதில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது . 48 காலணியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது .அய்யனார்
கோவில் ஊரணியை ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது . நகர் பகுதிகளில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு , பேவர் பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 26 – வது வார்டில் உள்ள சமுதாயக்கூடம் மராமத்து செய்யப்பட்டு கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது .
25 -வது வார்டில் ரோடுகள் சரி செய்யப்பட்டு , மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது . ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மாப்பிள்ளைதுரை ஊரணியை மராமத்து செய்து அதன் கரையில் நடை பாதைகள் அமைத்து சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது .
27 – வது வார்டில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது .சிவகங்கை நகர் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஹைமாஸ் விளக்குகள் , 2 பூங்காக்கள் , எல்.இ.டி. மின்விளக்குகள் நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது . 27 -வது வார்டில் தாய்சேய் நல விடுதி , 2- சின்டக்ஸ் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது . இளையான்குடி மற்றும் மானாமதுரை சாலைகளில் 2 பஸ் ஸ்டாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது . நகரில் ரூ, 4 கோடி மதிப்பீட்டில் 100 – தினசரி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது . நகராட்சி நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதிகள் மூலம் சிவகங்கையின் மத்தியில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது . இதில் 18 கடைகள் , மற்றும் நவீன கழிப்பறைகள் , குளியல் அறைகள் , ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது .
குண்டூரணியை மராமரித்து செய்து அதில் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது .இதேபோல் செக்கடி ஊரிணியையும் புனரமைத்து நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது . பிள்ளைவயல் காளியம்மன் கோவிலுக்கு தார்ச்சாலைகள் , பேவர் பிளாக் சாலைகள் , தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இலவச நெட் வசதியுடன் ரூ ,1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது . மாவட்ட நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் , உழவர் சந்தையின் எதிரே தாய்சேய் நல விடுதி ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளது . நகரில் புதிய வாரச் சந்தை திறக்கப்பட்டு அதில் கழிப்பறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் நகராட்சியில் உள்ள ராமச்சந்திரா பூங்கா முற்றிலும் மாறுபட்ட வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது . திமுக ஆட்சியின் சாதனையில் இவற்றை பொதுமக்கள் அறிய வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார் .