சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாண்டியன் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ என்ற புத்தகம் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திரு.திக்விஜய்சிங், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
முதலமைச்சர் வரவேற்புரையில், NEP 2020 என்ற புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள், அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நூல், கல்வி உரிமைக்கான ஜனநாயகப் போராட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவாயுதமாக அமையும் என்றார். மும்மொழிக் கல்வி திட்டம், பின்தங்கிய மாணவர்களை ஆபத்துக்களை இந்த புத்தகம் வெளிக்கொணர்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மதயானையை நம்முடைய கல்விக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றின் பேரில், நிச்சயம் வீழ்த்துவோம். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம், என்று உறுதியளித்தார்.
இப்புத்தகம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாணவரின், பெற்றோரின் மற்றும் ஆசிரியரின் கைகளில் சென்று சேரவேண்டும் என்ற கனவில் இந்த வெளியீடு நடைபெறுகிறது.