திருப்பத்தூர்:ஜூன்:25, திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 நபர்கள் மரணத்தை கண்டித்து அஇஅதிமுக நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58க்கும் மேற்பட்ட இறந்தவர்களுக்கு அஇஅதிமுகவின் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 58க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அதுவும் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் இருப்பவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
கள்ளச்சாரயத்தால் தேர்தல் நேரத்தில் பேச்சா பேசுனிங்க குடும்பமே தெருவில் வந்து பேசுனிங்க இன்றைக்கு முதலமைச்சரும் பேசுனாரூ முதலமைச்சர் உடைய பையன் பேசுனாரூ அவருடைய தங்கச்சி பேசுனாரூ மாமா பேசுனாங்க மருமகன் பேசுனாங்க என்ன வென்று பேசுனாங்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையேழுத்து மது விலக்கை அமல்படுத்தவோம் என சொன்னார்கள்.
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திசை திருப்பி சமயம் சந்தர்ப்பத்தால் ஆட்சி பண்ணிட்டாங்க.
உங்கள் பாட்சா 2026ல் பலிக்காது மக்கள் தெளிவாக இருக்கிறது என கூறினார்.
அண்ணா திமுக ஆட்சியில் 60 ரூபாய் கோட்டர் ஆனால் இன்றைக்கு 150ரூபாய் விக்குறாங்க எப்படி இவங்க கள்ளாச்சாரயம் குடிக்காம இருப்பாங்க என பேசினார்.
தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் சூரியன் சுட்டெரித்து இருக்குது அதுக்கு மேல இந்த சுண்ட வெயிலும் பன்னுது என நகைச்சுவையாக பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் திருப்பதி, செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட,நகர,ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் ஆர்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.