கோவை மாவட்டம் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் 1134 ஆம் பசலி தீர்ப்பாயம் நடைபெற்றது.
இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் ஸ்ரீ வித்யா,(நி.எ),வட்டாட்சியர் மு விஜயரெங்க பாண்டியன் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் உள் வட்டத்திற்குட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர்.
அலுவலகம் சார்பில் கூறுகையில் தற்போது வரையிலும் 116 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர். இந்நிகழ்வில் மண்டல் துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



