தஞ்சாவூர் ஜூன் 2
தமிழில் பண்பாட்டை வளர்க்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தமிழ் பண்பாட்டு மையமும் அமெரிக்காவின் கேரோலைனா தமிழ் கலைக்கூடமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
நிகழ்வில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவர் முன்னிலையில் தமிழ் பல்கலைக் கழக பதிவாளர் (பொ) தியாகரா ஜன், கேரோலைனா தமிழ் கலைக் கூடப் பொறுப்பாளர் தஞ்சைகோ. கண்ணன் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில்:
கேரோலைனா தமிழ் கலைக் கூடம் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வட கொரோலைனா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பு. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் பண்பாட்டு மையத்தின் மூலம் நடத்தப்படும் குரலிசை , கருவியி சை, பரதம், நாட்டியப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் கேரோலைனா தமிழ் கலைக்கூடம் வாயிலாக நடத்தப்பட்டு, தமிழ் பல்கலைக்கழக வழி தேர்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்கும் வகையில் செய்யப்படும் என்றார்
அப்போது தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் கற்பகம், நிதி அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்