தஞ்சாவூர் நவ.9.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமை தாங்கினார்.மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் அவர் கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதை அடுத்து அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் .தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அண்ணா கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .அதை தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீணையை நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் முரசொலி எம்பியை அவரது இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேடு புத்தகத்தில் கையெழுத்திட்டார்
நிகழ்ச்சியில்,பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கல்யாண சுந்தரம் எம்பி, எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், முன்னாள் எம்பி பழனி மாணிக்கம் ,தஞ்சாவூர் மேயர் சண் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்