தருமபுரி குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு
விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் , ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 10-ம் தேதி திங்கட்கிழமை பால் குடம் ஊர்வலமும், இரவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விநாயகர் திருத்தேர் விழாவும், 12-ம் தேதி புதன்கிழமை காலை முதல் முறையாக பெண்கள் மட்டும் கலந்து கொண்டு திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவிலில் கொடி ஏற்றப்பட்டதை முன்னிட்டு
கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.