மயிலாடுதுறை பிப்.13-
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா.
மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீ மன்மத சுவாமி உடனுறை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் 33 அடி உயரத்தில் முருகப்பெருமான் பிரம்மாண்ட நாயகராக அருள் பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்களின் காவடி, பால்குடம் புறப்பாடு நடைபெற்றது. காக்கும் பிள்ளையார் கோவில் காவிரி படித்துறையில் இருந்து பக்தர்கள் காவடி அழகு காவடி பால் காவடி, ,பால்குடம் எடுத்து அலகு காவடி ஆட்டங்களுடன் பல்வேறு வீதிகளின் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தில் மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இந்த காவடிகள் மாயூரநாதர் ஆலயம் குமரக்கட்டளை சுப்ரமணியசுவாமி சன்னதிக்கு செல்லும். இதேபோல் எடத்தெருவாசிகளால் லாகடம் மலைக்கோயிலில் அருள்பாலிக்கும் ஶ்ரீபாலதண்டாயதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காவடி புறப்பாடு நடைபெற்றது. பூநூல் தோட்டத்திலிருந்து ரதக்காவடி, உருக்காவடிகள், பால்காவடிகள், பன்னீர்காவடிகள், அலகுகாவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் காவடிகளுக்கு தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் மயிலாடுதுறையில் பல்வேறு ஆலயங்களில் முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நடைபெற்றது.