பூதப்பாண்டி, மே 14
குமரி மாவட்டங்களில் உள்ள குளங்களில் விவசாய தேவைகளுக்காக விவசாயிகள் அவர்களுடைய விவசாய நிலங்களுக்கு ஏற்ப்ப அரசிடம் இருந்து அனுமதி சீட்டு பெற்று கொண்டு அதற்க்கான நேரத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வழங்கி இருந்தார் அதன் அடிப்படையில் விவசாயிகள் வண்டல் மண் களை குறிப்பிட்டுள்ள நேரத்தில் எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலையில் இறச்ச குளம் சந்திப்பு அருகே தோ வாளை தாசில்தார் ே காலப்பன் வரும் போது ஒரு டெம்போவில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி வண்டல் மண் எடுத்து வந்தது தெரிந்தது உடனே அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரித்து வருகிறார்