சுசீந்திரம் ஜன 20
புத்தளம் அருகே உள்ள அரிய பெருமாள் விளைகாலினியில் வசித்து வருபவர் விஜய் 26 இவர் சொந்த ஊர் நாகர்கோவில் ஒழுகினசேரியாகும். தற்போது அரிய பெருமாள் விளைகாலனியில் வசித்து வருகிறார் இவரது தாய் தந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர் இவரது உடன்பிறப்புகள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர் அறியப்பெருமாள்விளை அரசு காலணி வீட்டில் தாமசித்து வந்துள்ளார் குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஏதோ விஷம் அறுந்தி மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்து உள்ளார். அதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் சிகிச்சை பலனிக்காமல் நேற்று முன்தினம் விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது அண்ணன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.