நாகர்கோவில் ஜன 29
குமரிமாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் பிப்ரவரி11 அன்று நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான அனைத்து தொழிற்சங்கங்களின் ஆயத்தக்கூட்டம் ஏ. ஐ. டி. யு. சி. அலுவலகத்தில் வைத்து அதன் மாவட்ட தலைவர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் எம். சுப்பிரமணியன், எஸ். ஜெஸ்லின், சி. ற்றி. மூர்த்தி, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை விளக்கி ஏ. ஐ. டி. யு. சி. யின் மாவட்டச்செயலாளர் மால்டன் உரையாற்றினார்.எஸ். மணிகண்டன் கே. நடேசன் மற்றும் சி. முருகன், ஜே. அருள் எஸ். சி. எஸ். டி. சங்கத்தை சார்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் கோரிக்கையை விளக்கியும் பல ஆண்டுகளாக போராடி வரும் டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கையை கொண்டு செல்வதுடன் பணியாளர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கபடாமல் இயக்கம் பாதுகாக்கும் என உறுதியளித்தார். கூட்டத்தில் குமரிமாவட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொள்வதுடன், காலவரம்பற்ற விடுமுறை கடிதத்தை நிர்வாகத்திடம் அளித்து போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் ஜி. பத்மனாபன் நன்றி கூறினார்.