நாகர்கோவில், டிசம்பர் 10 –
தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்கியது. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் இன்று தொடங்கி டிசம்பர் 23 அன்று நிறைவு பெறுகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகள் 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 15 முதல் தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும்.
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4வரை அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை வழங்கப்படுகிறது. நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5ம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும்.


