சிவகங்கை மாவட்டம், ஏப். 29
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் மற்றும் தமிழறிஞர்கள் உட்பட பலர் உள்ளனர்.