கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கிருஷ்ணகிரி சார்பாக, பள்ளிக்கல்வித்துறையால் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாநில அளவில் U-14, U-17 மற்றும் U-19 பிரிவு மாணவ/மாணவியர்களுக்கான குடியரசு தின /பாரதியார் தின (RDS/BDS) தேக்வாண்டோ மற்றும் குத்துசண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் .. அவர்கள் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.எம். இராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



