கோவை மே:22
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் நாற்பதாவது மாணிக்க ஆண்டு துவக்க விழா ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெயர் பலகை திறக்கப்பட்டும் சங்க கொடி ஏற்றியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் கோசலாதேவி செயலாளார் அன்னபூரணி பொருளாளர் மகாதேவி துணைத் தலைவர்கள் குப்புத்தாய், ஈஸ்வரி, இணைச் செயலாளர்கள் தனலட்சுமி ,சைலா ஸ்ரீ மாவட்ட இணைச் செயலாளர் மணிமேகலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சௌந்தர்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் என் பழனிச்சாமி கல்வெட்டினை திறந்து வைத்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் எம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட கிளை தலைவர் காளிமுத்து, மற்றும் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர் ஒன்றிய பொருளாளர் மகாதேவி நன்றி உரை ஆற்றினார். மேலும் சத்துணவு பணியாளர்கள் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்றியும், பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது

Leave a comment