மதுரை செப்டம்பர் 17,
மதுரை மாநகராட்சி வார்டு எண்.54 ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான் ஆகியோர் உடன் உள்ளனர்.