தருமபுரி மாவட்டம், ஏப்.22
தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் தமிழக முழுவதும் பனைத் தொழில் புரிவோர் மீதான மனித உரிமை மீறலை தடுக்கவும், கள்ளை மதுவிலக்கு தடை சட்டத்தில் இருந்து நீக்கி கல் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், கல் விடுதலை மாநாடு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் விசாரணை இன்றி பனையேறிகள் மீது விஷ சாராய வழக்குப் பதிவு செய்வதை கைவிட வேண்டும். கள்ளை மதுவிலக்கு சட்டத்திலிருந்து நீக்கி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின்கீழ் கொண்டு வர வேண்டும்.என்றுஈ பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கள் இறக்குவோர் மீது வழக்கு பதிவு செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது தமிழகத்தில் கள்ளுக்கான தடை என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
தமிழகத்தில் 80 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்களில் 3 கோடி வாக்குகள் உள்ளன. இத்தனை ஆண்டு காலம் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கள்ளுக்கான தடையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் .இல்லையெனில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 3 கோடி விவசாய குடும்பங்களும் திமுகவை புறக்கணிக்கும். இவ்வாறு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.