சிவகங்கை: ஏப்:03
சிவகங்கை மாவட்டம் பாகனேரியை அடுத்துள்ளது சொக்கநாதபுரம் . அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் 3 – நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் புகழேந்தி தலைமை தாங்கினார் . தமிழாசிரியை சிந்தாமணி வரவேற்று பேசினார் . நிகழ்ச்சியில் முன்னாள் பத்திரிகையாளர் , கண்டரமாணிக்கம் தமிழாசிரியர் இந்திரா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் .
அப்போது அவர் பேசியதாவது : தமிழ் தரும் தன்னம்பிக்கைகள் அளவற்றது . மனித வாழ்வை தன்னம்பிக்கை தான் நிலை நிறுத்துகிறது .சவால்கள் இல்லாத வாழ்க்கையில் சுவை இல்லை . நேர்கோடுகள் ஒருபோதும் ஓவியம் ஆவதில்லை . நெளிந்தும் வளைந்தும் செல்லும் கோடுகளே அற்புதமான ஓவியங்களாக உருவெடுக்கிறது . முயற்சிகள் எடுக்கும் போது முரண்கள் வழி மறிக்கத்தான் செய்யும் . அதை முறியடித்து நடப்பவர்களால் மட்டுமே மகுடம் சூட்ட முடியும் . புவியீர்ப்பு விசையை எட்டி உதைத்து தான் ராக்கெட் விண்ணில் செல்கிறது . எனவே வாழ்க்கையில் வரும் தடைகளை தாண்டிச் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் . சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை . அறிஞர் ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கியது 70 வயதில் . பாரதியாருக்கு – பாரதி என்ற பட்டம் கிடைத்தது 11 வயதில் . கரிகால் சோழன் அரியணை ஏறியது 14 வயதில் . அலெக்சாண்டர் உலகின் பெரும்பகுதியை வென்றது 16 வயதில் . எனவே சாதனைகளுக்கு வயது என்பதே கிடையாது . சாதிக்க புறப்படுங்கள் மாணவர்களே என்று பேசி முடித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாணவர்களின் பாட்டரங்கம் , கவியரங்கம் , போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்புகள் போன்றவை நடைபெற்றது . இந்த நிகழ்வை அறிவியல் ஆசிரியர் ரா.கணேசன் தொகுத்து வழங்கினார். ஆசிரியை தென்னரசி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் . ஆசிரியர் ஜேம்ஸ்குமார் நன்றி கூறினார் .
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.