கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சூலூர் பேரூராட்சியில் உறுதிமொழி எற்பு
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன். தலைமையில் உறுதிமொழி எற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமர்த்தும் வழக்கமும் கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்கு உரிய குற்றமாக வரைமுறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தரிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.