திண்டுக்கல் மாவட்டம் ஏப் 23
தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் இம்மாதம் 25 – ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வும், மாநில அளவிலான போட்டியும் கடந்த 12 – ஆம் தேதி முதல் 13 வரை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவுகளில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 5 மாணவிகள் உள்பட 13 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 13 மாணவர்களுக்கும் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான மாஸ்டர் எம். பிரேம்நாத், குழு மேலாளர் தங்கலட்சுமி, பயிற்சியாளர்கள் சக்திவேல், ராஜதுரை மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கிரிடம் அணிவித்து பாராட்டினார்கள். தேர்வு செய்யப்பட்ட தமிழக அணி வீரர்கள் 23 – ஆம் தேதி மகாராஷ்ரா செல்கின்றனர்.