ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் ஈரோடு செங்கோடம் பாளையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு குடியரசு தின விழாவை யொட்டி இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதயம் நற்பணி இயக்க தலைவர் மகாதேவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் டாக்டர் எல் எம் ராமகிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ராம்குமார் டாக்டர் தங்கவேலு ராமகிருஷ்ணன் சோழா லோகநாதன் எஸ் பி செல்வராஜ் மற்றும் உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்



