ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களை சிறப்பு ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதை உரிமம் பெற்ற தனியார் மற்றும் அரசு சார்ந்த விதை விற்பனை நிலையங்களில், திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் தலைமையில் விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 12 விதை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ,9 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை ஆய்வு பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விதை இருப்பு விவர பலகை ,விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல் பதிவுச் சான்று, முளைப்புத்திறன் அறிக்கை ஆகியவை முறையாக உள்ளதா என ஆய்வு செய்தனர். முளைப்புத்திறன் திறன் அறிக்கை இல்லாத
92,250 ஆயிரம் மதிப்புள்ள
70 கிலோ உளுந்து விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில விதை விற்பனை நிலையங்களில் முறையான ஆவணங்கள் பராமரிப்பு இல்லாததால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்ன விதை ஆய்வு சிறப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். .இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா ,விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உள்ளிட்ட ஆய்வின்போது கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
பரமக்குடியில் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.