மதுரை மாநகராட்சி பந்தல்குடி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஊரணிகள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகள், தேவையற்ற குப்பைகள், மண்துகள்கள், வளர்ந்துள்ள செடி கொடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் மழைநீர் சீராக செல்வதற்கு தேங்கியுள்ள மண் படிவங்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குலமங்கலம் மெயின் சாலை பகுதியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் மற்றும் செல்லூர் 60 அடி சாலை பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செல்லூர் பந்தல்குடி வாய்க்கால் தூர்வாரும் பணியில் 9 ஹிட்டாட்சி வாகனங்கள், 2 ஜே.சி.யி.இயந்திரங்கள், 2 ரோபோ, 3 டிராஸ் லாரிகள், 3 டிப்பர் லாரிகள், 10 டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் (வாகனம்) திருரிச்சார்டு,
உதவிப் பொறியாளர்கள் பாண்டிகுமார், பிரேம்சங்கர், திருப்பதி, மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.