அரியலூர்,ஜூலை:25
அரியலூர் மாவட்டம் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை முனைவர். ஆர்.கிருஷ்ணசாமி கண்காணிப்புப் பொறியாளர் (நெ), க(ம)ப, (கூ/பொ), விழுப்புரம் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். ஆய்வின் போது உடன் பெ.வடிவேல், கோட்டப் பொறியாளர் (நெ), க(ம)ப, அரியலூர், உதவிக்கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.