தஞ்சாவூர், பிப்.9.
எலும்பு முறிவு ஏற்ப்பட்டு படுத்த படுக்கையான சமையல் கலைஞரு. க்கு மீண்டும் நடமாட வைத்த தஞ்சாவூர் மீனட்சி மருத்துவமனை யில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் குமார் 2018-ம் ஆண்டு பணிபுரிந்த இடத்தில் உயரத்திலிருந்து கீழே விமுந்ததில் இடது தொடை எலும்பி ல் முறிவு ஏற்பட்டது.எலும்பு முறிவை அறுவைசிகிச்சை செய்தும் குணமடைய வில்லை முன்னேற்றம் இல்லை.
நடமாட்டமின்றி படுத்த படுக்கை யாக 4 ஆண்டுகளாக கடுமையான வலியுடன் அவதிப்பட்ட அவர்
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவ மனையில் பரிசோதனைகளுக்கு சேர்ந்தார். அங்குஎலும்பியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான பார்த்திபன் தலைமையில் எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் அவருடைய தொடைஎலும்பு முழுமையாக பொருந்தி இணைந்ததால் தற்போது நலமடைந்துள்ளார், இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில் .
எலும்பியல், இதய வியல், மயக்க மருந்தியல், இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்களின் ஒத்துழைப் பின் காரணமாக இந்த நோயாளிக் கான சிகிச்சையில் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் எல்லாம் வெற்றிகரமாக கையாள முடிந்தது மீனாட்சி மருத்துவமனையின் நவீன கட்டமைப்பு வசதிகளும், டாக்டர்கள் குழுவினர் நிகரற்ற நிபுணத்துவமும்,இந்த சவால்களை வெற்றிகரமாக சமாளித்து சாதிக்க உதவின என்றார்.
எலும்பியல் துறை தலைவர் பார்த்திபன் பேசுகையில்.. .
சேதம் அடைந்த எலும்பை சரி செய்ய அல்லது அகற்றுவதற்கு எலும்புத்திசு மறுபதியம் செய்யப் படுகின்ற ஒரு அறுவை சிகிச்சை செயல் முறையான எலும்பு ஒட்டு முறையை நாங்கள் மேற்கொண் டோம் .கவனமான திட்டமிடல் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணர்களுடைய ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டின் வழியாக நோயாளிக்கான சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, எதிர்பார்த்த நடமாட்ட திறனை அவருக்கு மீண்டும் வழங்கியிருக் கிறது
மீண்டும் பணிக்கு திரும்பி இயல் வாழ்க்கையை வாழ்வதற்கு வழி வகுத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் .



