கிருஷ்ணகிரி மே. 13
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை சார்பாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் கீர்த்திவர்மாவின் தாயார் .கஸ்தூரி அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் கீர்த்திவர்மாவின் தாயார் .கஸ்தூரி அவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது அவர்கள் வசித்து வரும், மாரசந்திரம் தரப்பு, ஜீனூர் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை (1.50 சென்ட்) பட்டாக்கான ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், விரைவில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இம்மாணவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், விரைவில் மருத்துவ பரிசோதனை தொடங்கி உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளார்கள். மேலும், மாணவர் தொடர் சிகிச்சை பெறும் வகையில் சென்னையிலேயே கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது 6T601 மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் .சின்னசாமி, வருவாய் ஆய்வாளர் .ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.



