நாகர்கோவில் மார்ச் 9
மேற்கு மாநகர் பாஜக மண்டல் தலைவர் தலைமையில் முன்னாள் மண்டல் தலைவர் சிவபிரசாத், சிவசீலன்,மாமன்ற உறுப்பினர் வீரசூரபெருமாள்,விஜயகுமார் முன்னிலையில் ராமன்புதூர் ஜங்ஷனில் வைத்து நேற்று மாலை மத்திய அரசின் நிதிநிலை பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பாலசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சியில்
சிறப்பு பேச்சாளர் வேல்பாண்டியன்
கலந்து கொண்டு மத்திய அரசின் நிதிநிலை பட்ஜெட் விளக்கி சிறப்புரையாற்றினார்..
கூட்டத்தில் மாநிலம், மாவட்டம், மண்டல் அணி, பிரிவு பொறுப்பாளர்கள், சக்திகேந்திரம் தலைவர்கள், வார்டு தலைவர் கிளை தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்..
மேலும் மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க மும்மொழிக்கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியை சிவராஜன் தொகுத்து வழங்கினார், இறுதியாக
அகிலன் நன்றி உரையாற்றினார்.