ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனுக்கு உட்பட்டது மண்டலமாணிக்கம் ஊராட்சி ஆகும். இதில் பதினெட்டுபட்டி கிராமக்களும் அடங்கும் மண்டலமாணிக்கத்தில் மட்டும் சுமார் 1000 பேர் வசித்து வருகின்றனர் இங்கு வசிக்கும் மக்களுக்கு தெருவுக்கு 2குழாய் வீதம் அமைத்துள்ளனர் அதில் தினசரிகாலை குடிதண்ணீர் திறந்துவிடுவார்கள் மக்கள் குடம் கொண்டு வந்து 3குடம் தண்ணீர் பிடித்து கொண்டுபோவார்கள் தற்சமயம் 1ந்தேதியில் இருந்து எந்தவிதகாரணமும் இல்லாம் தற்போது வரை தண்ணீர் திறந்துவிடலை இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம்அடைகின்றனர் தண்ணீர் குடம் 12ரூபாய் தந்து விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் ஆகையால் மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்டலமாணிக்கத்தில் தினசரி தண்ணீர் விடஆவணசெய்யவேண்டுமாய் மண்டலமாணிக்கம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


