பரமத்தி வேலூர், ஏப்ரல் 23
பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் செயல்பாடுகளின் போது சரக்கு மற்றும் ட்ரையலர் வாகனங்களின் முதன்மை வழங்குநர்களாக இருந்த இவர்கள், சரக்கு போக்குவரத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கடும் வீழ்ச்சியை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள், உதவியாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் லாரிகளுடன் வந்து பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது,
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூடல் என்பது தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையாக பாதித்துள்ளது. ஆலையின் செயல்பாட்டின் போது தினசரி 1000 லாரிகள் இயக்கப்பட்டு முக்கிய வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது.
இந்நிலையில் 600 க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் தங்களுக்கு வேறுவழியின்றி ஓட்டுநர்களாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் வேலையில்லா திண்டாட்டத்தாலும், பல்வேறு தொடர் தொழில்கள் மூடப்படுவதால் நிதி நெறுக்காடியாலும் வாழ்கை சுமையை தாங்கமுடியாமல் போராடி வருகின்றனர்.
மேலும் ஏறக்குறைய 6500 லாரிகள் ஆலையின் செயல்பாடுகளை நம்பியிருந்த நிலையில் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி செய்யும் கிட்டதட்ட 9000 டன் பொருட்களை கொண்டு செல்ல தினசரி 430 லாரிகள் தேவைபடும் நிலை இருந்தது.
தற்போது ஆலை மூடல் நிலை என்பது ஆயிரக்கணக்கான குடுபம்பங்களையும் அவற்றின் வளர்ச்சி மற்றும் பொருளாதார காரணிகளை அழித்துள்ளதுடன் கடுமையான இழப்புகளை நீண்ட காலமாக ஏற்படுத்தியுள்ளது.
என்று தெரிவித்தனர்.