சென்னை, செப்டம்பர் – 04, உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவை இணைந்து பாலியல் கண்காட்சி மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தியது.
இந்த கண்காட்சியை தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். மேலும் ஸ்டெம்செல் சிகிச்சை விழிப்புணர்வு குறித்து டாக்டர் டி.காமராஜ் எழுதிய
“ஸ்டெம்செல் என்னும் அருமருந்து” என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
மக்களுக்கான மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. டாக்டர் டி.காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் தம்பதியரின் மருத்துவ பணிகள் பாராட்டுத் தக்கவை. குழந்தையின்மை, பாலியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை அளிப்பதிலும்
உலக அளவில் ஏற்பட்டு வரும் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் இந்த மருத்துவமனையில் அறிமுகம் செய்து மக்களுக்கான உயர் தர சிகிச்சையை வழங்குவதிலும் இந்திய மருத்துவத்துறைக்கே முன்னோடியாக விளங்குகிறார்கள்.
ஸ்டெம் செல் சிகிச்சையை இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்ததுடன் மட்டுமில்லாமல் குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முடி கொட்டுதல் உள்பட பலவற்றுக்கான தீர்வை அளிக்கிறார்கள்.
மருத்துவ அறிவியலை எளிய தமிழில் பொது மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆண்டுதோறும் இத்தகைய விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்பது இவர்களின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பாலியல் தினத்தையொட்டி இந்த ஆண்டு 5 நாட்கள் கண்காட்சியை நடத்துகிறார்கள்.
ஸ்டெம்செல்லை தொப்புள்கொடியில் இருந்து தான் எடுத்துவருகிறார்கள் என இதுநாள் வரை நான் நினைத்திருந்தேன். மாறாக ஒவ்வொருவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து எடுத்து அவர்களுக்கே சிகிச்சை அளிக்க முடியும் என்பதனை இப்போது நான் இங்கு வந்துதான் தெரிந்துகொண்டேன்.
பொதுமக்கள் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு, அதே சமயத்தில் இங்கு அளிக்கப்படும் இலவச பரிசோதனைகளையும்சிகிச்சைகளையும் பெற்று பலன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர்.