தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை காவல் நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



