திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் புறநகர் மாவட்ட தலைவர் M.சேவியர் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம்
மாநில துணைத்தலைவர் S.M.சாதிக்பாட்ஷா முன்னிலை வகித்தார். ரெட்டியார்சத்திரம் மாவட்ட செயலாளர் மா.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் M.ராஜ்குமார் கலந்து கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சி உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளான
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களில் 2000 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும்.
பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திடும் பொழுது 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பணி அனுபவத்தினை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டத்திலேயே பட்டதாரி ஆசிரியராக பணி அமர்த்திடல் வேண்டும்.ஆசிரியர் பயிற்றுநர் நிலையும் பட்டதாரி ஆசிரியர் நிலையும் ஒன்றுக்கொன்று மாறக்கூடிய நிலையில் சமமானது எனவே ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு டெட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று என பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி எங்களுக்கு கலந்தாய்வு நடத்திட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னரும் புதிய பணியிடங்கள் நியமனத்திற்கு முன்னரும் எங்களுக்கு கலந்தாய்வு நடத்திடவேண்டும்.
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களின் மாதாந்திர சம்பள பணத்தினை IFHRMS முறையில் தமிழக அரசின் கருவூலகம் வாயிலாக பெறுவதற்கு வழிவகை செய்திட வேண்டும். 2000 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்திட்ட பின்னர் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடவேண்டும்.பள்ளிக்கல்வி துறை தொடக்கக் கல்வித் துறை மற்றும் அனைத்து துறைகளின் பணிகளை மாநிலத் திட்ட இயக்குனரின் அனுமதி இன்றி ஆசிரியர் பயிற்றுநர்களின் மீது திணிக்க கூடாது என்று வேண்டலாகிறது.ஒரே மாதிரியான நிர்வாக நடைமுறைகளைஅனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்திட வேண்டலாகிறது.அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிப் பதிவேட்டினை E RESISTER செய்திட வேண்டலாகிறது.ஆசிரியர் பயிற்றுநர்களின் நிலையான பயணப்படியினை ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டலாகிறது.உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக முடித்து ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டலாகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டலாகிறது.உயர்கல்வி முடித்துள்ள ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஊக்க ஊதிய தொகை வழங்கிட வேண்டுதலாகிறது.2009 இல் பணியில்சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களின் ஊதிய முரண்பாட்டினை கலைந்திட வேண்டலாகிறதுஅனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களையும் மாலை 5.45 மணிக்கு மேல் தேவையின்றி வேலை செய்திடவற்புறுத்திட வேண்டாம் என்று வேண்டலாகிறது. EMIS வலைதளத்தில் வட்டார கல்வி அலுவர்கள் LOGIN ID கீழ் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்களின் பெயர்களை CEO/APO/BC LOGIN கீழ் வைக்க வேண்டும் என்பன உட்பட 16 கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M. நவீன்ராஜா ,திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள். மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் மாவட்டத் துணைத் தலைவர் M.சிங்காரவேலன், ஒட்டன்சத்திரம் மாவட்ட துணைச் செயலாளர் M.கனகராஜ்பாண்டியன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிலக்கோட்டை மாவட்ட பொருளாளர் A.ரிச்சர்ட் நன்றி கூறினார்.



