நாகர்கோவில் நவ 11
உத்தராகாண்ட் மாநில தமிழ் குடும்பங்களின் 8-வது ஆண்டு சங்கமம் நிகழ்ச்சி குடிக்கி பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்சங்க தலைவர் ஜஸ்டின் தாமஸ் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் இளையராஜா அழகர்சாமி வரவேற்புரை வழங்கினார். முன்னாள் தலைவர் பழனி (எ) பாபு , செயலாளர் முத்துகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், துணைச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினார என். தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியினை சங்க செயலாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். சங்க பொருளாளர் பூபதி சங்கத்தின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது பின்னர் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தளவாய்சுந்தரம் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார் அவர் போசும் போது உத்தராகண்ட் மாநில தமிழ் குடும்பங்களின் சங்கம் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இச்சங்கம் தோன்றியது பற்றி கேள்விப்பட்டேன் திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு இப்பகுதியில் வைப்பதற்கு பல தடைகள் ஏற்பட்டதாகவும் அப்போது இப்பகுதி தமிழகள் அனைவரும் ஒன்றினைந்து திருவள்ளுவர் சிலையினை வைப்பதற்கு ஒன்றினந்து செயல்பட்டதாகவும் அதன் மூலம் இச்சங்கம் தொடங்கப்பட்டது என்பதனை கேள்விபடுகின்ற போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இச்சங்கம் தோன்றியதிலிருந்து தமிழகத்தில் இருந்து இப்பகுதிக்கு வருகின்றவர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகின்ற போது இத்தமிழ் சங்கம் நோடியாக சென்று அவர்களுக்கு உதவி புரிவதும் குறிப்பாக கொரான காலகட்டத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது மிகவும் மனிதாபிமான செயலாக விளங்குகிறது இந்நிகழ்ச்சிக்கு உத்தராகண்ட் விஜிலன்ஸ் டிஐஜி செந்தில், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் , திருவட்டார் ஒன்றிய செயலாளர் சுதர்சன், ஒன்றிய பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன் மற்றும் தமிழ்சங்க மகளீர் நிர்வாகிகள் பரமேஸ்வரி, சுகன்யா, சந்திரா, அபிநயா மற்றும் தமிழ்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.