திருப்பத்தூர்:ஜூன்:25, திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச்செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார்.
மண்டல பொறுப்பாளர் ஜம்புலிங்கம், தலைமை நிலைய செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் சட்ட மன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி செய்யும் போது கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது. இதை தடுக்க காவல் துறை, வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர கள்ளச்சாராய மரணம் நடைபெற்றால் அதற்கு அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரநிதிகள் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாவட்ட அமைச்சர் என அனைவரும் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
அதற்கான புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என கூறினார்.