நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால்தலைகளின் மூலம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அரிய வகை அஞ்சல் தலைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சி வழியாக மாணவர்களிடையே தபால்தலை சேமிப்பின் முக்கியத்துவம், இந்திய பாரம்பரியத்தின் கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
எஸ் எம் ஆர் வி அரசு (மகளிர்) தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள், அஞ்சல் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புத்தர் மற்றும் தபால்தலைகள் தொடர்பான விழிப்புணர்வு வினாடிவினா போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தின் மூத்த அஞ்சல் அதிகாரி சுரேஷ் வழங்கினார்.



