தக்கலை டிசம்பர் 27
சுவாமியார்மடம் புனித யூதா ததேயு திருத்தல குடும்ப பெருவிழா இன்று (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.00 மணிக்கு செபமாலை, புனிதர் புகழ்மாலை. நவநாள் மறைவுரை திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருத்தல அதிபர் இராயப்பன் முன்னிலையில் அருட்தந்தை ஜெரால்டு திருக்கொடியேற்றி திருப்பலியும், தமிழக கார்மல் சபை ஆலோசகர் அருட்தந்தை கிறிஸ்துதாஸ் அருளுரையும், இரவு 8.00 மணிக்கு அன்பின் விருந்தும், 2-ம் நாள் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியை தந்தை பிராங்கிளின் ரைமண்டும், மாலை 6.00 மணிக்கு தந்தை மனோகிம் சேவியர் திருப்பலியும், தந்தை ஜோஸ் பிரசாந்த் அருளுரையும், 3-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை தந்தை ஜெயராஜ்-ம், தந்தை இராபர்ட் ஜாண் கென்னடி அருளுரையும், மாலை 6.00 மணிக்கு தந்தை சார்லங் விஜி திருப்பலியும், தந்தை ஆன்றணி பாஸ்கர் அருளுரையும், இரவு 8.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 4-ம் நாள் திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு மணிலிக்கரை கார்மல் துறவற குருக்கள் மரையுரை திருப்பலியும், இரவு 8.00 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம், பின் அன்பின் விருந்தும், 5-ம் நாள் செவ்வாய்க்கிழமை தந்தை ஆல்வின் விஜய் திருப்பலியும், தந்தை இயேசு தாசன் மறையுரையும், இரவு 11.00 மணிக்கு புதுவருட திருப்பலியும் (01-01-2025) 6-ம் நாள் புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு தக்கலை புனித எலிசியார் துறவற இல்ல குருக்கள் திருப்பலியும் அருளுரையும், இரவு 8.30 மணிக்கு புனிதரின் சிறிய தேர் பவனி. தெற்றை, ஆமோடு, நெடியாங்கோடு செல்லும், 7-ம் நாள் காலை 11.00 மணிக்கு நெய்யாற்றிக்கரை தந்தை ஜோஸ் தலைமையில் மலையாள திருப்பலி தியானம் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு தமிழக கார்மெல் சபை இணை தலைமை தந்தை சூசை ரெத்தினம் திருப்பலியும், தந்தை ஆல்பர்ட் அருளுரையும், 8-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் நவநாள் திருப்பலியும் அருளுரையும், இரவு 8.00 மணிக்கு “அனல் காற்று” சமூக நாடகமும், 9-ம் நாள் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு செபமாலை, நவநாள் ஆடம்பர கூட்டு திருப்பலியை தந்தை அந்தோணிமுத்துவும், தந்தை சகாயதாஸ் அருளுரையும், இரவு 7.00 மணிக்கு புனித யூதா ததேயு அலங்கார பெரிய தேர் பவனியும், 10-ம் நாள் ஞாயிறு நிறைவு நாளன்று காலை 9.00 மணிக்கு குழித்துறை குருகுல முதல்வர் சேவியர் பெனடிக்ட் ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார். முளகுமூடு பசலிக்கா அருட்தந்தை கில்பர்ட் லிங்ஸ்டன் அருளுரையும், காலை 10.30 மணிக்கு திருக்கொடியிறக்குதலும், 11.00 மணிக்கு அன்பின் சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள், அருப்பணி பேரவையினர், இறை பங்கு மக்கள். பக்தர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.