திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியின் 91-வது பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவின் தொடக்க நிகழ்வாக இறைவனின் அருட்துணை வேண்டி பரத நடனத்தை மாணவிகள் அழகாக ஆடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியின் தாளாளர் Sr.L.சகாயமேரி தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் நகர் சரக வட்டார கல்வி அலுவலர் P.விஜயா படிப்பிற்கான பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தின் மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்குத்தந்தை பேரருட்பணி.R.மரிய இஞ்ஞாசி , முத்தழகுபட்டி புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி.S.அமலதாஸ் , திருத்தொண்டர்.அருளப்பன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.மாணவக் மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய கிராமிய நடனங்கள் ,கோலாட்டம், கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் திருவள்ளுவர் ஆண்டில் திருக்குறள் நடனம், வரவேற்பு நடனம், காட்டுவாசி நடனம், நகைச்சுவை நாடகம் மற்றும் தாண்டியா நடனம், காமிக் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. படிப்பு, திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் சிறுசேமிப்புக்கான பரிசுகள் வழங்கினார்கள்.மேலும் ஊர் நிர்வாகிகள் மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள், கல்வி அறக்கட்டளை தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் நிக்கோலாஸ், உறுப்பினர்கள்,PTA தலைவர்.ஆரோக்கிய மேரி, முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெயமேரி, ஆசிரியர்.அல்போன்ஸ் ஆசிரியர்.பாத்திமா,Bro.அருள்சாமி லெசால் சபை மற்றும் Sr.ஹெல்டா புனித ஜோக்கிம் நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் 24 வது வார்டு கவுன்சிலர் ஸ்டெல்லா மற்றும் நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்கள், பெற்றோர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க உறுப்பினர் தனுஷ்கோடி படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களை பாராட்டி விருது வழங்கினார். பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி எல் ஜெயராணி மிகச் சிறப்பாக ஆண்டறிக்கையை எல்சிடி மூலம் ஒளிபரப்பு செய்தார்.
மேலும் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் 35 ஆண்டுகளாக சத்துணவு சமையலராக பணிபுரிந்த மாசிலாமணி பணி நிறைவு பெறுவதால் பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுபரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.பள்ளி ஆண்டு விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி.எல்.ஜெயராணி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்தினார்கள்.பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும மற்றும் நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
புனித பிரான்சிஸ் சேவியர் 91-வது பள்ளி ஆண்டுவிழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics