மேலபாண்டூர் கிராமத்தில் விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்.ஆயிரக்கனக்கான பக்தர்கள் கும்பாபிசேகத்தை கண்டு களித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது மேலபாண்டூர் கிராமம்.இங்கு மிக பழைமையான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.காவிரியின் வட திசையில் அமைந்துள்ள இக்கோயிலில், விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயங்களில் மகாகும்பாபிசேகம் சீரும் சிறப்பு மாக இன்று நடைபெற்றது. கும்பாபிசேகத்தை ஒட்டி யாகசாலை அமைத்து புனித நீர் கடங்கள் வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இன்று யாக சாலையில் பூர்ணாகுதி நடைபெற்று,புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒதி, வானவேடிக்கை, மேல தாள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து கோபுர விமானங்களை சென்றடைந்து தொடர்ந்து கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு கும்பாபிசேகத்தை கண்டு களித்து அம்பாளின் அருளை பெற்றனர்.