இலங்கை கடற்கொள்ளைக்கு பி.டி.செல்வகுமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே 5 தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்; விலையுயர்ந்த சாதனங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.கடற்கொள்ளையர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என கலப்பை மக்கள் இயக்க தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட ஏழை மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.