கோவை ஜன:06
கோவை சங்கனூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியான பீடம் சார்பில் பத்தாம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.
அதிகாலையில் கணபதி , லட்சுமி, சரஸ்வதி, துர்கை தெய்வங்களுக்கு ஹோமங்கள் நடைபெற்றது. ஹோமத்துடன் துவங்கிய குருபூஜை விழாவானது விழாவில் ஆனந்த குருபூஜை காயத்ரி மந்திரம் உபதேசம் கங்கை மற்றும் இராமேஸ்வரம் தீர்த்தம் மற்றும் மாலையில் 1008 வலம்புரி சங்கு அபிஷேகம்,1008 படிகலிங்கம் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் மிகவும் பிரசித்திபெற்ற ருத்ராட்சம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த குருபூஜை குறித்து மடாதிபதி பேசுகையில்
பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் அருள்பாளித்திட பொதுமக்களுக்கு நேரடியாக இறையருள் கிடைத்திடவும் சர்வ தோஷங்களும், தீய சக்திகளிலிருந்து விடுபெற வேண்டியும், படிப்பு, தொழிலில், விளையாட்டும் முன்னேற்றம் அடைய வேண்டியும். உலக மக்கள் மனதில் அமைதி நிலவ வேண்டியும் ஆனந்தம் கிடைத்திட வேண்டியும் குருபூஜை விழா பத்தாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அனைத்து பொதுமக்களும் ஜாதி,மதம் கடந்து அன்போடு கலந்து கொண்டு இறையருள்பெறவேண்டுமென்று நான் பிரம்மரிஷி விசுவாமித்திரரை வேண்டிக்கொள் வதாகவும் தெரிவித்தார்.
குருபூஜை விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விஸ்வாமித்திரரை தரிசித்து அருள்பெற்றனர்.பின்னர் அனைவருக்கும் அபிஷேகத்தில் வைக்கப்பட்ட ருத்ராட்சங்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.