கம்பம், ஆக. 05
கம்பம் அருகே சுருளி அருவியில் உள்ள ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்டக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது.
இதில் நீதிபதி ரெகுபதி, இந்து சமயஅறநிலையத்துறைஅறங்காவல் குழு உறுப்பினர் கே.ஆர். ஜெயபாண்டியன், அட்வகேட் செந்தில்குமார், ராஜசேகர், ராஜமோகன், முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சுருளி அருவியில் பொதுமக்கள் குவிந்தனர்.முன்னோர்களை நினைத்து சுருளி சுரபி நதியில் புனித நீராடி வழிபட்டு சென்றனர்.கம்பம், சின்னமனூர் ,போடி, தேனி, திண்டுக்கல், மதுரை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டு பூத நாராயணன் ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.