பூதப்பாண்டி – அக்டோபர் – 15-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்ச குளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இறச்சகுளம் ஊராட்சி விஷ்ணுபுரம் காலணி பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் துவக்கி வைத்தார், இம்முகாமில் பூதப்பாண்டி உதவி வேளாண்மை அலுவலர் சண்முகவேல் , வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை உதவி மருத்துவர் இசக்கி ராஜன், முருகேஸ்வரி கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் லட்சுமி நாராயணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுடன் கலந்து கொண்டு முகாமில் மருத்து அறிவுரைகளும், உணவு பழக்க வழக்கம் இனிவரும் மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் அதிலிருந்து பாதுகாப்பது குறித்தும் விவசாயி களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் அறிவுரை அளிக்கப்பட்டது.