மதுரை ஜூன் 02
மதுரை
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்
பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில்
பிரபல எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நிறுவனம் வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து
கிளையின் முதுநிலை விற்பனைப் பிரிவு சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் கடந்த
1951, ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளன்று இடதுசாரி இயக்க சுதந்திரப் போராட்டத் தோழர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 74 ஆண்டு காலத்தில் படிப்படியாக வளர்ந்து கல்வி மற்றும் பண்பாட்டுப் பணியில் பேரமைப்பாக நிலை கொண்டுள்ளது. ருஷ்ய இலக்கியங்களையும் அரசியல் பொருளாதாரம், தத்துவார்த்தம், புதினம், ருஷ்ய சிறுவர் நூல்கள், மருத்துவ நூல்கள், விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், பொறியியல் நூல்களை தமிழில் மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்து வாசிப்பை தமிழகம் முழுவதும் மேம்படுத்தியுள்ளோம். தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூலநூல்களைப் பதிப்பு செய்து விநியோகம் செய்து வருகிறோம்.
மேலும் இலக்கியம், சிறுவர் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, அறிவியல், வரலாறு, சுயமுன்னேற்றம், மார்க்ஸியம், பொதுவுடைமை, மெய்யியல், தொழில்நுட்ப இயல், சமூகவியல் தொடர்பான தலைசிறந்த 10000-க்கும் மேற்பட்ட நூல்கள் எங்கள் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.
மேலும் தமிழின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வதன் பொருட்டு ஈழத்துப் பேராசிரியர்கள் கலாநிதி க.கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்களின் நூல்களை வெளியிட்டுள்ளோம். இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, ஆப்டின் ஆகியோரின் சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளோம். மார்க்சிய அறிஞர்களான தா.பாண்டியன், பேராசிரியர் முத்துமோகன், எஸ்.வி.ராஜதுரை, ஆகியோரின் நூல்களும் திறனாய்வாளர்களான தி.சு.நடராசன், ராஜ்கௌதமன், பா.ஆனந்தகுமார். ந.முருகேசபாண்டியன். போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம். தமிழக வரலாற்று ஆய்வாளர், நா.வானமாமலை நாட்டாரியலார் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர்கள் பொன்னீலன், டி.செல்வராஜ், மாற்கு, அ.கா.பெருமாள், கணியன் பாலன், ஜெயசீல ஸ்டீபன், ராஜ் கௌதமன். வீ.அரசு, சுப்ரபாரதிமணியன், சி.ஆர்.ரவீந்திரன், டாக்டர் சு.நரேந்திரன், மருத்துவர் கு.சிவராமன், சு.தமிழ்ச்செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி போன்ற முன்னனி எழுத்தாளர்களின் நூல்களையும், இறையன்பு ஐ.ஏ.எஸ். பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். செல்வம் ஐ.ஏ.எஸ், ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ். போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நூல்களையும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் A.P.J.அப்துல்கலாம், உள்ளிட்ட பல்வேறு படைப்பாளுமைகளின் நூல்களும் எமது நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறோம்
மேலும்
லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் வந்துள்ளன. சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் என்ற வகைமையில் 22 தொகுப்பு நூல்கள் வெளிவந்து வாசிப்பாளர்கள் மத்தியில் சாதனை படைத்துள்ளது
என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து
மண்டல மேலாளர் மகேந்திரன் தெரிவிக்கையில்
நியூ செஞ்சுரி புத்தக
நிறுவனம் 1951 ல் தொடங்கி வாசிப்பாளர்களின் பேராதரவுடன் 75 -ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும்
பவளவிழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் 75 இடங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் த.அறம் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பு செய்தார். அதனைத் தொடர்ந்து மதுரை கிளை மேலாளர் தனசேகரன் விழா நிறைவு நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கிளை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பவள விழா இனிதே நிறைவுபெற்றது.