நாகர்கோவில் செப் 13
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் அதிகாரிகளுக்கு சீருடையில் பொருத்தும் 400 கேமராக்கள் வழங்கப்பட்டு இந்த கேமராக்கள் மூலம் ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கப்படும் இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் உரையாடல்கள் வீடியோ பதிவு செய்யப்படும். இதன் செயல்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.



