போச்சம்பள்ளி ஆக:17
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹாக்கி அசோசியேசன் சார்பாக தென்னிந்திய அளவிலான ஹாக்கிப்போட்டி இரண்டு நாட்கள் ஆன போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது, நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரரும் ஹாக்கி அசோசியன் தலைவர் கே கோவிந்தராஜ் தலைமை வகித்து இந்த போட்டிகளை துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ராணுவ வீரர் பி,கமலேசன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் முனைவர் இரா, முனியப்பன் ,ஹாக்கி அசோசியேஷன் தேர்வு குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்திருமதி மேரி ஜூலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவில் சிறப்பு விருந்தினராக நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர் ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் இணை செயலாளர் சிவ பிரகாசம், தேர்வு குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கே டி மாதேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர், முன்னதாக ஹாக்கி அசோசியன் துணைத் தலைவர் திருமதி மோனிஷா,பொருளாளர் மோனிகா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள், இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியளவில் ஏராளமான அணிகள் பங்கு பெற்றன,தொடர்ந்து பங்குபெறும் அணிகளுக்கும் வெற்றி பெற்ற அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன