திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி,பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் பரிந்துரைப்படி ஊரக வளர்ச்சி(ம) ஊராட்சித்துறை சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி 22 இலட்சம் ஒதுக்கப்பட்டு புதிய நவீன நூலக கட்டிடம் கட்டப்பட்டது, அதனை திறந்துவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது,வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,நூலகர் தங்கப்பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய நூலகத்தில் போட்டி தேர்வு பயிற்சிகளுக்கு தேவையான நூல்கள் வழங்கினர், மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் அழகேசன், ஆரோக்கியம்,பிரேமா மற்றும் திமுக நிர்வாகிகள் சங்கர்,அண்ணாத்துரை, பொன்னையா, ஜேசிபி.முருகன்,செம்பர்சுரேஷ், பதினெட்டாம்படி,பெனிட்,அரசு ஒப்பந்ததாரர் சிவக்குமார், தங்கவேலு,சுந்தர், சேவியர்,சக்திவேல்,கஸ்பார்,ஜேம்ஸஆட்சிமுத்து,ஆரோக்கியம், வேதமுத்து,முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



