அஞ்சுகிராமம் மார்ச்-7
விசிக குமரி மாவட்ட முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை தலைவர் இந்திராநகர் சமூக ஆர்வலர் முத்துக்குமார்,குமரி மாவட்ட காங்கிரஸ் விளையாட்டுதுறை மாவட்ட தலைவர் அருண் டிசவுஷா,வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனாவை சந்தித்து மனு அளித்தனர் மனுவில் கூறியிருப்பதாவது
மயிலாடி அருகேயுள்ள கூண்டு பாலம் மிகவும் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இந்நிலையில் திமுக அரசு சுமார் 2 கோடி நிதி ஒதுக்கி புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டி திறப்பு விழா கண்டாலும் பெரும்பான்மையான பணிகள் முடிவடையாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று (வெள்ளி) முதல் பாலம்,ரோடு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகள் முடிவடைய சுமார் 3 மாதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. பாலப்பணிகள் நடைபெறுவதால் அஞ்சு கிராமம் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழக்கம்பாறை, மயிலாடி ஆராட்டுமடம், ஒசரவிளை, பொற்றையடி வழியாகவும், மறுமார்க்கத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து அழகப்பபுரம், பொட்டல் குளம், கொட்டாரம் வழியாக மயிலாடி, வழக்கம்பாறை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்புக்கு இறுதி தேர்வுகள் நடந்துவருகிறது. கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவியர் பெரும்பாலும் நாகர்கோவில், மற்றும் சுசீந்திரம், மயிலாடி பகுதிகளில் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த திடீர் போக்குவரத்து மாற்ற அறிவிப்பால் மாணவ, மாணவியர் மிகவும் பாதிக்கப்படுவர். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சைக்கு செல்லமுடியாமலும் தவிப்புக்கு உள்ளாவர்கள். மேலும் பயணதூரமும், பணசெலவும், மனதளவில் மன உளைச்சலுக்கும் உள்ளவர்கள். எனவே மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டும் பால பணியை தேர்வு முடியும்வரை தள்ளிவைக்க வேண்டும் என குமரி மாவட்ட விசிக முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை தலைவர் சமூக ஆர்வலர் இந்திராநகர் முத்துக்குமார், காங்கிரஸ் கிழர் மாவட்ட விளையாட்டு துறை மாவட்ட தலைவர் சமூக சேவகர் அருண்.டி சவுசா, அகஸ்தீஸ்வர வடக்கு வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் கூறியுள்ளார்கள்