தஞ்சாவூர். பிப்.1
நடப்பாண்டில் இதுவரை 56 ஆயிரத்து878 டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது.
நடப்பு ஆண்டில் மண் வளம் காக்கும் வகையில் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் ,தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து திட்டங்களும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டில் 448. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 27 தேதி வரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் 13 ஆயிரத் து 208 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.