மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள் கடந்த ஆறு நாட்களாக கோவில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொண்டு (நவ. 7) சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் அருகே சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு கொட்டும் மழையில் வீர வேல், வெற்றி வேல், என்று பக்தர்கள் கோஷங்களை ஒலிக்க நடைபெற்றது. அதன் பின்னர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின் புஷ்பசப்பரம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
(நவ.8) காலை சட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடனும் வீரவேல் வெற்றிவேல் கோஷத்துடனும் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.