கருங்கல், பிப்- 23
குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாரம்,பாலூர் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கு தேவையான மல்பெரி செடி சாகுபடி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் வட்டார வேளாண்மை குழு தலைவர் கோபால் தலைமை தாங்கி மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றி பேசினார். கிள்ளியூர் வேளாண்மை அலுவலர் சஜிதா வேளாண்மை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மல்பெரி செடி சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்க்கும் முறைகள் குறித்து பட்டு வளர்ப்பு துறையில் துணை இயக்குனராக பணியாற்றிய ஆல்பர்ட் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இயற்கை இடுபொருள் தயாரிக்கும் முறைகள் குறித்து இயற்கை விவசாயி மிக்கேல் பயிற்சி அளித்தார்.
மேலும் ராதாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தி இந்தியன் விவசாயக் கல்லூரி மாணவிகள் அவந்திகா, ஆஸ்லின் ஐஸ்வர்யா, ஜின்க்ஷ, ஹிமா ,அஜினா ,ஜியா ஆகியோர் விவசாயிகளுக்கு உளுந்து பயிரில் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பபிதா அட்மா அலுவலர்கள் ஹனீகிராப் ,ஜோசப் ஆக்னல் ஆகியோர் செய்து இருந்தனர்.